குளோபன் எழுதியவை | 20/05/09

சுதந்திரம், பாதுகாப்பு… பெண்ணுக்கு கோர்ட்டிலும் இல்லையே!?

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம்… “வழக்கறிஞரை செருப்பால் தாக்கிய பெண் கைது’ என்கிற ரீதியிலேயே பல நாளிதழ்களிலும் வந்தது.

அங்கு நடந்த நிகழ்வை அப்படியே பதிவு செய்யப்படாதததன் நோக்கத்தை விட்டுவிடுவோம்.

அப்படி என்னதான் நிகழ்ந்தது?

தினமணியை புறட்டுவோம்…

…………………..

உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரைத் தாக்கியதாக பெண் கைது
 
சென்னை, பிப். 6: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை செருப்பால் அடித்ததாக காயத்ரி (24) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் காயத்ரி (24). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து கார்த்திக் தொந்தரவுப்படுத்துவதாகக் கூறி, விவாகரத்து கேட்டு காயத்ரி வழக்குத் தொடர்ந்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி நாராயணன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்காக காயத்ரி, கார்த்திக் இருவரும் நீதி மன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர். நீதிமன்றத்தில் காயத்ரி சாட்சியம் அளித்தார். அப்போது, காயத்ரி தரப்பில் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமையே முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

ஆனால், கார்த்திக் தரப்பில் விசாரணையை ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது. இதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதி நாராயணன் 16.03.09-க்கு ஒத்திவைத்தார்.

இதுதொடர்பாக, கார்த்திக் தரப்பு வழக்கறிஞருக்கும் காயத்ரிக்கும் நீதிமன்றத்துக்கு வெளியே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்த வழக்கறிஞர் காயத்ரியை தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த காயத்ரி தனது செருப்பைக் கழற்றி, அவரை அடித்துவிட்டாராம். இதைப் பார்த்த பிற வழக்கறிஞர்கள் காயத்ரியை சூழ்ந்து கொண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சப்தம் கேட்டு வந்த போலீசார், காயத்ரியை உயர் நீதிமன்ற போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற போலீஸ் நிலையத் தில் கார்த்திக்கின் வழக்கறிஞர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காயத்ரி, அவரது தந்தை தினகர் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

காயத்ரியின் கன்னத்தில் பலமாக அடிபட்டிருந்ததால், சிகிச்சைக்காக அவர் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

…………………………………………..

உண்மை என்ன?

* கணவனின் கொடுமையை தாங்க முடியாமல்தான், அந்தப் பெண் வழக்கை துரிதமாக நடத்தக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். கணவனின் வழக்கறிஞரோ… தனது சொந்த ஆதாயம் கருதி… வழக்கை வேண்டுமென்றே நீட்டித்துள்ளார்.

* நீங்கள் ஒரு பெண்… உங்களிடம், “அவ்வளவு அ…. பு எடுத்தால், நான் வருகிறேன்,” என்று எந்த நபரேனும் சொன்னால், உங்கள் கைகள் சும்மா இருக்குமா?

அப்படி வக்கிரத்துடனும் இளக்காரத்துடன் கேட்கப்பட்ட வழக்கறிஞரின் கேள்விக்கே, அந்தப் பெண்ணின் செருப்பு பதில் சொல்லியிருக்கிறது. இது தவறா? அந்த இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்..?

* தன்னை பொது இடத்தில், அதுவும் நீதிமன்ற வளாகத்தில் அடித்த பெண்ணை, கண்ணா பிண்ணாவென்று அடித்துத் துவைத்ததோடு, அந்த வழக்கறிஞருக்கு உதவியாக மேலும் நான்கைந்து வழக்கறிஞர்களும் அந்தப் பெண்ணை கண்டபடி அடித்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலீஸாரால் கூட விடுவிக்க வைப்பதில் சிரமம் ஆகிவிட்டதாம்.

அந்த வழக்கறிஞர்களின் கைகளால் அடிப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் பாகங்களை இங்கேக் குறிப்பிடுவதற்கு, எனது கைவிரல்களும், கீ போர்டும், கணினியும் மறுக்கின்றன.

* ஜனநாயக நாட்டில், அதுவும் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்தக் கொடூரத்தைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை… மாறாக, வேடிக்கைப் பார்த்த சேடிஸ்டுகளே மிகுதி.

* மிகக் கொடுமைக்கு ஆளானது என்னவோ, அந்தப் பெண்தான்… ஆனால், முதலில் செருப்பால் அடித்ததாலும், வழக்கறிஞர்களின் ஆதிக்கத்தாலும், அந்தப் பெண்ணுக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, அந்தப் பெண் கைதாகியிருப்பது கொடுமையின் உச்சக்கட்டம்.

* ஆம்… அந்தப் பெண் மீதும் தப்பு இருக்கிறது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞரை செருப்பால் அடிப்பது மகா தப்புதான்.

ஆனால்…

மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்… நீங்கள் ஒரு பெண்… உங்களிடம், “அவ்வளவு அ…. பு எடுத்தால், நான் வருகிறேன்,” என்று எந்த நபரேனும் சொன்னால், உங்கள் கைகள் சும்மா இருக்குமா?

இன்னும் ஆயிரமாயிரம் பெரியார்கள் வந்தாலும் நம் தமிழகம் திருந்துவதற்கு சாத்தியம் இல்லை என்ற பெசிமிஸ சிந்தனையைத் தான், இந்தச் சம்பவம் தூண்டுகிறது.

நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் இல்லை என்பதற்கு… இந்தச் சம்பவத்தை விட மிகச் சிறந்த அண்மை உதாரணம் வேறு எதுவும் இல்லை!

வழக்கம் போல், சில வழக்கறிஞர்கள் செய்யும் இத்தகைய கொடுமைகளால், சட்டத்தை மத்திக்கும் பல வழக்கறிஞர்கள் நற்பெயரும் கெட்டுப் போவதையும் இங்கே ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கடைசியில் அந்தப் பெண் இப்படி நினைத்திருப்பாளோ, “குடிகார கணவரின் வதையே தேவலாம்!”


மறுவினைகள்

  1. பரிதாபத்திற்குரிய விஷயம்.
    //இன்னும் ஆயிரமாயிரம் பெரியார்கள் வந்தாலும் நம் தமிழகம் திருந்துவதற்கு சாத்தியம் இல்லை என்ற பெசிமிஸ சிந்தனையைத் தான், இந்தச் சம்பவம் தூண்டுகிறது//
    நிச்சயமாக சாத்தியமில்லை.

  2. Lawyers thinking that whatever they do is right because they practice law, have taken it in their own hands. But here it is an indivdual who retaliated and was hurt in the bargain. Remember the Lawyers’ agitation against Kiran Bedi? If that is what can happen to KIran Bedi what about commom people?

  3. all the lawyers involved should be punished immediately.
    court premises have become a den for
    rowdyism

  4. Now Roudies Like Two Places one Politics another one is Lawer

  5. We need public safety commandos. We have to perfect training and file a case against those lawyer and they come to the court and we follow them and we go through our law.

    It will happen one day. No human right in Tamil nadu. First criminal police. They take bribe 214 crore per year and 2 lockup death every day.

  6. ஆணாதிக்க சமூகத்தினால் நிறுவப்பட்ட அதிகார நிறுவனங்கள் தங்கள் பெயரை நிலைநாட்டுவதற்கு பெண்களை மட்டுமே இலக்காக்கி வருவது என்றுமே புதிதல்ல. தற்போது பங்களூரில் நடந்த சம்பவமும் இதற்கு சாட்சி. சரவணபவன் அண்ணாச்சியைவிட அவருடன் தொடர்பெனக்கூறி ஒரு ஜீவஜோதியையும், காவல்காரர்களை காட்டுவதற்கு பதில் ஜெயலட்சுமியையும் சந்திக்கு இழுத்து போட்டோ பிடிப்பதில் உள்ள வக்கிரமும் அப்படியே. தொடர்ந்து இத்தகைய பதிவுகளை எழுத வேண்டுமென்ற வேண்டுகோளுடன்,

    http://www.thoomai.wordpress.com

  7. Hi Im Satheesh From Kuwait..

    antha vakkil avanoda appanukku thaan piranthanannu kealunga sir..

    nalla ammakku pirantha oruthan ippadi keatka mattan.

    and antha vakkila onnum sollatheenga. antha ponnoda purusana nikka vachu sudanum. avan nijamavea aambalaya iruntha kandippa antha vakkila ippa konnuduvan..

    avan aambalayea illa..

    athanala thaan avan silenta irukkan sir…

    Antha vakkil kitta marakkama kealunga avan avanoda appanukku thaan piranthanannu….

    Ungal Satheesh M

  8. இதையே விவகராத்தல் பாதிக்கப்பட்ட பதிவர் ஒருவர் அப்படியே உல்டாவாக போட்டதை படித்தேன் …சற்றே இந்த செய்தியை ஆராய்ந்தால் எனக்கு தோன்றியது அந்த பெண்ணுக்கு பல கொடுமைகள் நடந்து விட்டன ..கொடுமை 1. கோர்ட் படி மிதிக்க வேண்டிய அளவிற்கு திருமண வாழ்க்கையால் தள்ளப்பட்டவர்
    2. பெண் செருப்பை எடுப்பது பொதுவாகவே அவர்களின் நடத்தை விமர்சனத்துக்குளாகும் போது ..வக்கீலை செருப்பால் அடித்தார் என்றால் உண்மையிலேயே அந்த வக்கீல் ஒரு மோசாமான வார்த்தை உபயோகித்திருப்பார் எனபது கண்கூடு.
    3.ஒரு வக்கீலை அடித்து விட்டாள் என்பதால் ,உடனே பொங்கி எழுந்து , தன் வீரத்தை பல ஆண் வக்கீல்கள் அந்த பெண்ணின் மேல் நிரூபித்து காட்டியது …
    4.எல்லா வற்றிற்கும் மேலாக , பாதிக்கப்பட்ட அந்த பெண்ணையே கைது செய்தது கொடுமையின் உச்சம் …

  9. [...] சுதந்திரம், பாதுகாப்பு… பெண்ணுக்கு… [...]


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்