பெண் போலீஸ் கொடுத்த கற்பழிப்பு புகார்
சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
தூத்துக்குடி, மார்ச் 9-
பெண் போலீஸ் கொடுத்த கற்பழிப்பு புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கற்பழிப்பு புகார்
நெல்லை மாவட்டம் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செந்தில்குமார் (வயது 34). இவர் மீது தூத்துக்குடியை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் அந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், தான் நெல்லையில் பணிபுரிவதாகவும், தன்னை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்தாகவும், பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
வழக்கு
இந்த புகாரை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது 3 பிரிவுகளில் (இ.பி.கோ 417, 376, எஸ்.சி., எஸ்.டி.ஆக்ட்) வழக்கு பதிவு செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சொந்த ஊர் திசையன்விளை. அவர் மீதான வழக்கு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- செய்தி: தினத்தந்தி
“இந்தச் செய்தியையொட்டி, ஒரு பக்க அளவிலோ அல்லது அதற்கு மேலாகவோ கட்டுரை எழுதி அலச வேண்டும் என்ற அவசியம் இல்லை.”