குளோபன் எழுதியவை | 20/05/09

முகாம்களில் இருந்து சிறார்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு : பி.பி.சி. செய்தி

இலங்கையில் யுத்த பிரதேசங்களில் இருந்து வெளியேறிய மக்கள் தங்கியுள்ள இடைதங்கல் முகாம்களில் இருந்தும், வவுனியா நகரில் இருந்தும், பதினெட்டு வயதுக்கு உட்பட்ட சிறார்கள் ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டு வருவதாக சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

lankassஅரசாங்க ஆதரவு குழுக்கள் இந்த செயல்களில் ஈடுப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் செயற்பட்டு வரும் ஆயுதக்குழுக்கள் கடத்தபட்டவர்களை தங்களது அமைப்பில் சிறார் போராளிகளாக சேர்த்து வருவதாக தமக்கு தகவல் வந்துள்ளதாகவும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈபிடிபி, ஃபுளொட், தமவிபு( கருணா அணி) போன்றவற்றுக்கு வவுனியாவில் இருக்கின்ற இந்த இடைத்தங்கல் தங்குதடையின்றி போய் வர அனுமதி இருக்கின்றது என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் சென்று உதவுவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த முகாம்களில் உள்ள சிறார்களின் பாதுகாப்பு உடனடியாக கவனிக்க வேண்டிய மோசமான நிலையில் இருப்பதாகவும் இந்த அமைப்பு கூறுகின்றது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியான பிரிகேடியர் உதயநாணயக்கார, இது போன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் நன்கு புனையப்பட்ட கதைகள் என்றும், இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக இவ்வாறு கூறப்படுகிறது என்றார்.

மேலும் முகாம்கள் அரசாங்கத்தின் சிறப்பு படையின் மேற்பார்வையில் இருப்பதால் அந்த முகாமுக்குள் யாரும் எளிதாக செல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலத்தின் முழு வடிவம் படிக்க : Tamil children ‘being abducted’

நன்றி : பி.பி.சி. செய்தித் தளம்

புதினம் தளத்தில் விரிவாக படிக்க: வவுனியா முகாம்களில் இருந்து துணை இராணுவக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்: சிறார் போராளிகள் ஒழிப்பு கூட்டணி கடும் குற்றச்சாட்டு


மறுவினைகள்

  1. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைக்கான தர்மயுத்தத்தில் அப்பாவித் தமிழரின் படுகொலை தடயங்களை அழிப்பில் ஈடுபட்டுப் பாரிய வெற்றிப்பாதையில் ஸ்ரீலங்கா அரசு

  2. You Are Posting Really Great Articles… Keep It Up…

    We recently have launched a website called “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
    http://www.namkural.com.

    நன்றிகள் பல…

    - நம் குரல்


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்